தமிழகத்தின் முதல்வராக நான்..! கனிமொழி பேட்டியால் பரபரப்பு..!

கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முக ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்டார், பொருளாளராக துரைமுருகனும், முதன்மை செயலாளராக டிஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால், கனிமொழிக்கு எந்த பதவியும் புதியதாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது” முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என்றும், டெல்லி அரசியலில் மட்டுமே நாட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசியலில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்றும், பெண்களுக்கு அதிக பதவி வழங்க திமுகவில் வலியுறுத்துவேன் என்று கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.