உயிரிழந்த விரிவுரையாளரின் கணவர் ஏற்கனவே திருமணமானவரா?

திருகோணமலையில் கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் தற்கொலைக்கு அவரது கணவரே காரணமென குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளது. உயிரிழந்த விரிவுரையாளரின் நண்பிகள் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி, ஆதாரங்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளரான போதநாயகி செந்தூரன், கடந்த 21ம் திகதி திருகோணமலை கடலில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். வவுனியாவின் பின்தங்கிய கிராமமொன்றின் முதலாவது பட்டதாரியான இந்த பெண்ணின் மரணம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை திருப்பியுள்ளது.

பிரேத பரிசோதனையில், மூச்சு திணறலால் ஏற்பட்ட மரணமென்பது தெரியவந்தது.போதநாயகி தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டதும், அவரது கணவரான செந்தூரன் நீதிவான முன்னிலையில் சாட்சியமளித்தபோது, மனைவிக்கும் அவருக்குமிடையில் அண்மையில் சுமுகமான தொடர்பாடல் இருக்கவில்லையென்பது தெரியவந்தது.

உயிரிழந்த விரிவுரையாளரின் கணவனிற்கு ஏற்கனவே சில பெண் தொடர்புகள் இருந்தன, அது தெரிந்ததாலேயே விரக்கியடைந்து விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்டார் என, விரிவுரையாளரின் நெருங்கிய நண்பிகள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள நிலையில், இன்று இன்னொரு ஆதாரத்தை அவரது நண்பிகள் வெளியிட்டுள்ளனர்.

செந்தூரன் ஏற்கனவே திருமணமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த புகைப்படத்தை வெளியிட்டு, இந்த திருமணத்தை போதநாயகி முன்னரே அறிந்திருந்தாரா என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.