சிறுமியிடம் குழந்தையாக மாறி கமல் செய்த செயல், வைரலாகும் வீடியோ!

தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டும் என காரின் பின்னால் ஓடிவந்த சிறுமிக்காக,நடிகர் கமல்ஹாசன் காரை நிறுத்தி சிறுமியிடம் அன்பாக பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மக்களிடையே பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸின் 2வது சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகரும்,மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான இவர் சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது காரில் சென்ற நடிகர் கமல்ஹாசனின் காரின் பின்னால் பிக்பாஸ் உங்க கூட போட்டோ எடுக்கணும் என்று கத்திகொண்டே 4வயது சிறுமி அழுதுகொண்டே அவரது அம்மாவுடன் ஓடியுள்ளது.

பிக் பாஸ், பிக் பாஸ், உங்க கூட போட்டோ எடுக்கணும் என்று காருக்கு வெளியே கத்திகொண்டே தன் தாயுடன் வண்டியில் வந்த சிறுமியுடன்

காரை நிறுத்தி உரையாடி போட்டோ எடுத்து கொடுத்தார் நம்மவர்

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், எனக்கு கேட்கவில்லை. இந்த கண்ணாடி ஏத்தி இருந்துச்சுல..அதான் கேக்காது என்று அன்போடு கூறுகிறார்.

இதையடுத்து உன்ன பிடிச்சிருக்கு என்று குழந்தையிடம் கூறும் கமல்ஹாசன், போட்டோ எடுக்கும்போது, சிரிக்கணும், இப்ப அழக்கூடாது என்று மழலை குரலில் குழந்தையிடம் கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.