பெருங்காயத்தை தொப்புளில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

பெருங்காயம் சிறு செடி வகையைச் சார்ந்தது. மேலும் இவை அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும்.

பெருங்காயம் உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். மேலும் நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும்.

தொப்புளில் பெருங்காயம் வைத்தால் என்ன நடக்கும்?
  • ஒரு சிட்டிகை பெருங்காயத்தை எடுத்து அதில் சில துளி கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் இந்த கலவையை உங்கள் தொப்புளில் தடவி சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
  • இப்படி தினமும் செய்தால் ஆரோக்கியமான முறையில் வயிறு தொடர்பான தொல்லைகளைப் அனைத்தையும் போக்க முடியும்.
  • மேலும் இவை குடலின் இயக்கத்தை அதிகமாக்க, நீரில் உரைத்து பசையாக்கப்பட்ட பெருங்காயம் வயிற்றின் மீது தடவப்படுகின்றது.
பெருங்கயத்தின் மருத்துவ பயன்கள்
  • பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் தேள் கொட்டு உடனே சரியாகும்.
  • 2கிராம் பெருங்காயத்தை 20 மிலி நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு துளி அளவு காதில் விட காதுவலி குணமாகும்.
  • ½ கிராம் பொரித்த பெருங்காயத்தை சிறிதளவு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி குணமாகும்.
  • இஞ்சி தூள், கல் உப்பு மற்றும் பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து பருகினால் வாயுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எச்சரிக்கை
  • பெருங்காயத்தை அதிக அளவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், கழிச்சல், வயிற்று உப்புசம், சிறுநீர் எரிச்சல் புளியேப்பம் போன்றவற்றை உண்டாக்கும்.
  • உள் மருந்தாக பெருங்காயத்தை உபயோகிக்கும்போது பொரித்து உபயோகிப்பதே நல்லது.