மலேசியாவில் மதுபானங்களுக்கான வரி கூடுதலாக விதிக்கப்படுகின்றமையினால், அங்கு உள்நாட்டில் வீடுகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மிக பிரபல்யமாக காணப்படுவதுடன், அனைவராலும் அதிகமாக நாடப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (19) மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்தியவர்களில், 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெத்தனோல் என்ற இரசாயனப் பதார்த்தத்தினால் தயாரிக்கப்படும் குறித்த மதுபானத்தில் விஷம் கலந்தமையினால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 9 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.