பால்மா பக்கெட் ஒன்றின் விலையை, 25 ரூபாயால் குறைப்பதற்கு, வாழ்க்கைச் செலவுக் குழு முன்வைத்த பரிந்துரைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இதேவேளை, கோதுமை மாவின் விலையைக் குறைப்பது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி பெறப்பட வேண்டுமென, அமைச்சரவைக் கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







