பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் அம்மன் தாயி” படத்தின் டீசர்..!!

“அம்மன் தாயி” என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில்,அம்மன் தாயி என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படமாக தயாராகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிக்பாஸ் புகழ் ஜூலி.

புதுமுகம் அன்பு காதாநாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கின்றனர். மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இந்த திரைப்படத்தை தயாரிக்கயுள்ளனர்.

“அம்மன் தாயி” திரைப்படத்தை பற்றி இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் கேட்ட போது அவர் கூறியது, அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் பழிவாங்கிறார்? என்பதுதான் படத்தின் கதை.

இந்நிலையில், இந்த படத்தில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.