குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் போக்குவதற்கான வழிகள்!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு காரணம் பாதங்களில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படுவது தான்.

அத்தகைய பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் உள்ளன. அவை என்ன என்பதப் பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெதுவெதுப்பான நீர்

தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும்.

வாழைப்பழம்

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிழிந்து பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

சோப்புத் தண்ணீர்

தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

ரோஸ் வாட்டர்

கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

சோப்புத் தண்ணீர்

தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

வேப்பிலை

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.