நடிகை நிலானி வழக்கில் திடீர் திருப்பம் : இறந்தும் வாட்ஸ்ஆப் ஆன்லைனில் வந்த லலித்…

தமிழ் சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை நிலானியும், உதவி இயக்குனருமான காந்தி லலித்குமாரும், பல ஆண்டுகளாக பழகி வந்தனர்.

நிலானியை திருமணம் செய்ய விரும்பிய காந்தி லலித்குமார் சில நாளுக்கு முன் கே.கே.நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களிலேயே நிலானியும் காந்தி லலித்குமாரும் இணைந்து எடுத்துக்கொண்ட சில அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின.

அதில் இருந்த ஒரு வீடியோவில் நடிகை நிலானியின் காலில் காந்தி லலித்குமார் மெட்டி அணிவிப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த நிலையில் நிலானி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, தன்னைக் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தார்.

லலித்குமாருடன் பழகியது உண்மைதான். ஆனால் அவரின் சில பழக்கங்களை அறிந்து விலகி விட்டேன்.

அவரை திருமணம் செய்யவில்லை என்று கூறினார். எல்லாம் என்னை அபிராமி போல சித்தரிக்கின்றனர் என்று அழுதுகொண்டே கூறிய அவர், தன் தரப்பு நியாயத்தை ஊடகங்கள் முன்பாக வெளிப்படுத்தினார்.

அப்போது காந்தி லலித்குமார் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். லலித்குமார் மொபைலில் இருந்து புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வெளியிட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்மென கூறியுள்ளார்.

காந்தி லலித்குமாரின் செய்த அக்கிரமங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினருக்கு தெரியும் என்பதால் தான் இன்னும் அமைதியாக இருக்கின்றனர்.

அவர் இறந்தபிறகும் அவரின் வாட்ஸ்அப் நம்பர் இன்னும் ஆன் லைனில் தான் இருக்கிறது. அந்த போன் இப்போது யாரிடம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் போதும், புகைப்படங்கள், வீடியோ வெளியிட்டவர்களின் விவரம் தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.