மோடி தலைமையிலான பாஜக, ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக தேசிய காட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளது. யாருடன் கூட்டணி அமைப்பது, யாரை வேட்பாளராக நிறுத்துவது, தேர்தல் குழு அமைப்பது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் செய்து வருகிறது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கூட்டணியில் அதிமுக இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அடுத்த விராலிமலையில் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவிடம் அரசு ரீதியான புரிதல் மட்டுமே உள்ளது அவர்களுடன் அதிமுக கூட்டணி இல்லை. பாஜக உடன் கூட்டணிக்கு முயற்சிப்பது திமுக தான், அதிமுக அல்ல.
இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.