இந்தியாவில் பிரியாணி வாசனை பிடிக்காததால், கர்ப்பிணி மனைவி தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் ராஜு சர்கார்-அனிதா சர்கார். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த கம்மகொண்டன ஹள்ளியில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இந்நிலையில் கடந்த 27-ஆம் திகதி ராஜு பிரியாணி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் மனைவி முன்னிலையில், மகனுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
6 மாத கர்ப்பிணியான அனிதாவிற்கு, பிரியாணி வாசனையே பிடிக்காததால், ஆத்திரமடைந்த அனித உடனடியாக படுக்கை அறைக்குச் சென்றுள்ளார்.
அன்று இரவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். அடுத்த நாள் காலை வழக்கம் போல் ராஜு வேலைக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து அனிதா வீட்டிலிருந்த 12,000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது உடைமைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராஜு, இரண்டு நாட்களாக தொடர்ந்து தேடியுள்ளார்.
அதன் பின் கங்கம்மனா குடி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் அனிதா சொந்த ஊரில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பொலிசார் அனிதாவை சமாதானப்படுத்தி, கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.






