பறிபோன குழந்தைகள்: கைவிட்ட பெற்றோர்: கணவர் எங்கே: புலம்பலில் அபிராமி

சென்னை குன்றத்தூரை சேர்ந்த வங்கி ஊழியர் விஜய். இவரது மனைவி அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருட்டுக்காதலாக மாறியது. இந்நிலையில் அபிராமி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுந்தரம் அபிராமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் அபிராமி. இது அபிராமியின் குடும்பத்தினருக்கு தெரிந்ததனால் அபிராமியின் தந்தை அவரை கண்டித்து அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில் சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி இரண்டு குழந்தைகளையும், கணவரையும் கொல்ல முடிவு செய்து, தனது முடிவு குறித்து திருட்டுக்காதலன் சுந்தரத்திடம் கூறியுள்ளார்.  இதனையடுத்து சுந்தரத்தின்   ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரை கொடுத்துள்ளார். இதில் மகள் மரணமடையவே, உயிர் பிழைத்த மகனை மறுநாள் மூச்சை திணறடித்து கொன்றுள்ளார்.

பணி சுமை காரணமான கணவர் விஜய் அலுவலகத்தில் தங்கியதால் அபிராமியும் சந்தரமும் போட்ட திட்டத்தில் இருந்து தப்பிய விஜய், தந்போது  பெற்ற குழந்தைகளை இழந்து பைத்தியம் பிடித்தது போல் தவித்து வருகிறார் விஜய். குழந்தைகளை இழந்த துக்கம் மற்றும் மனைவியின் துரோகத்தில் இருந்து மீள முடியாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ள விஜய். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சமையல் கலை படிக்க சென்றபோது, அபிராமிக்கும் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகம் என்பதால், இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அபிராமி பிடிவாதமாக விஜய்யை தான் திருமணம் செய்வேன். இல்லையென்றால், செத்துவிடுவேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி அபிராமியின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆனால் விஜய்யின் பெற்றோர் திருமணத்திற்கு கடைசிவரை சம்மதிக்க மறுத்துவிட்டதால். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, விஜய் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார். சென்னை குன்றத்தூரில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர் அபிராமியின் பெற்றோர். முதலில் சந்தோஷமாகத்தான் இருவரும் குடும்பம் நடத்தினர். இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அபிராமியின் ஊதாரித்தனம், அனைவரும் தனது அழகை வர்ணிக்க வேண்டும் என்ற ஆசை, கூடவே காமவெறி இதனால் பல ஆண்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்துள்ளார் அபிராமி.