இணையத்தை கலக்கும் மஹிந்தவின் விசுவாசிகள்!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணி படுதோல்வியில் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேரணியில் கலந்து கொண்ட மஹிந்தவின் விசுவாசிகளின் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பெருந்திரளான கூட்டத்தின் நடுவில் இருவர் செய்த செயற்பாடு தற்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கும் விடயமாக மாறியுள்ளது.

கொழும்பு கோட்டை லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திலுள்ள மின்சார தூணில் ஏறி ஆபத்தான முறையில் செயற்பட்டுள்ளனர்.

இருவரும் தூணின் உச்சியில் ஏறி சாகசம் செய்வது போன்று நடந்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதேவேளை குறித்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதை தலைக்கேறிய நிலையில், வீதிகளில் வீழ்ந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.