கேரளாவில் வெள்ளத்தில் கை போன்று ஒரு மர்ம பொருள் காணப்பட்டதால், அது கடவுளின் கை எனவும், வெள்ளத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக அவர் இப்படி ஒரு செயலை செய்துள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வருகின்றனர்.
இந்த வெள்ளத்தில் பிளாஸ்டிக், குப்பைகளில் இருந்த பொருட்கள் போன்றவை அடித்து வரப்பட்டன.
இந்நிலையில் கேரளாவின் மிக முக்கிய நதியாக Muthirappuzha நதி இருக்கிறது.
இந்நிலையில் அந்த வழியே சென்ற மக்கள் எல்லாம் திடீரென்று அந்த நதியை நின்று கண்டனர்.
அப்போது அந்த நதியில் ஒரு பெரிய கை போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த மக்களில் சிலர் இது கடவுளின் கை எனவும், வெள்ளத்திலிருந்து நம்மளைக் காப்பாற்றவே இப்படி ஒரு நிகழ்வு என கூறியுள்ளனர்.
ஆனால் அதை சற்று அருகில் சென்று பார்த்த போது, கை வடிவில் உள்ள பாறை என்பது தெரியவந்தது, இருப்பினும் இது தொடர்பான விவாதம் அங்கிருக்கும் மக்களிடம் தற்போது வரை சென்று கொண்டு தான் இருக்கிறது.
கடவுளின் தேசமாக கேரளா பார்க்கப்படுவதால், அதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் பலர் நம்புவதால், அதை பார்ப்பதற்கு மக்களின் கூட்டம் அங்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.