தலைகீழாக இறங்கிய போது தலையில் அடிப்பட்ட நபர்!

சீனாவில் சிறப்பு ஆயுத பயிற்சியின் போது நபர் ஒருவர் 6 வது மாடியில் இருந்து தவறி விழுந்து தலை அடிப்பட்ட காட்சி நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது.

சீனாவில் உள்ள தாய்வான் நகரில் ஆயுத பயிற்சியின் போது தைப்பேயின் தண்டர் அதிகாரி இருவர் ஆறு மாடி கட்டிடத்தில் இருந்து இறங்கி பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் மட்டும் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கயிற்றை பிடித்து இறங்கி கொண்டிருந்த வேலையில், திடீரென ஒருவர் மட்டும் நிலைதடுமாறி கைப்பிடியை இழந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராமல் அவர் கிழே விழுந்து மயக்கமடைந்தார். தற்போது அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவனையில் தற்பொழுது அவர் நலமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

குறித்த காணொளியில் அவர் விழுந்து அடிபடும் காட்சிகள் இணையத்தில் வைரல்…