மனைவியை கொன்றுவிட்டு நாடமாடிய கணவன்: பொலிஸில் சிக்கியது எப்படி?

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தனது முன்னாள் மனைவியை கொலை செய்த வழக்கில் 60 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாரிஸின் வடகிழக்கு புறநகர் பகுதியான Villepinte பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 58 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டது.

குளியலறையில் இருந்து மீட்கப்பட்ட அந்த சடலமானது உடனடியாக உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், செயற்கை முறையில் மூச்சுத்திணறல் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மரணமடைந்த பெண்ணின் முன்னாள் கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் தான் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இருவரும் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழ்ந்ததாகவும்,

உயிரிழந்த பெண் தனது மகளுடன் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கொலை செய்துவிட்டு தடயங்களை அழிக்க முயற்சித்ததாகவும் அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.