யாழில் நடந்த வித்தியாசமான திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரபலங்கள்…..!!

யாழ்ப்பாணத்தில் சட்டரீதியாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய 38 ஜோடிக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களில் அரசாங்க செலவில் திருமணம் நடத்தி வைப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிநடத்தலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேசத்திலும், சனிக்கிழமை உடுவில் பிரதேசத்திலும், இன்றைய தினம் கரவெட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட செயற்பாட்டில் இந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தாயகத்தில் நீண்ட காலமாக நிலவிய போர் அனர்த்தம் காரணமாக பலர் பதிவு திருமணம் இன்றி வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.அவ்வாறான தம்பதிகளுக்கு சட்டரீதியாக திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.