குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அதனால் வரும் விளைவுகள்!

தற்போதைய கால பெண்கள் அவர்களின் திருமணத்தை தள்ளி போடுகின்றனர். அவ்வாறு திருமணம் செய்துகொண்டாலும், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுகின்றனர். ஒரு பெண் தாய்மை அடைவதற்கு 23 வயதுதான் ஏற்ற வயது என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான் பெண்ணின் திருமண வயது 23 என நிர்ணயத்தனர்.

பொதுவாக பெண் 23 வயதில் இருந்து 28 வயதுவரை குழந்தையை பெற்றுக்கொள்வது எளிது. அதை மீறினால் 30 வயதுவரை தள்ளி போடலாம். அந்த வயதையும் தாண்டினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.

தற்போதைய வாழ்கை முறையில் ஆண்களை போலவே பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். எனவே பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் இருப்பதால், அவர்கள் திருமணம் செய்வதை 30 வயதுக்கு மேல் தள்ளிபோடுகின்றனர்.

30 வயதை தாண்டி திருமணம் செய்யும் பெண்களுக்கு கரு முட்டை உருவாவதில் தாமதம் ஏற்பட்ட கூடும். எடை குறைவான குழந்தை, குறை பிரசவம் இது போன்று ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர். அந்த மாதிரியான பெண்கள் திருமணத்திற்கு முன்பும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பும் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

இதனால் பெண்கள் அவர்களின் திருமணத்தை நீண்ட நாட்களுக்கு தள்ளிபோடுவதை தவிர்க்கவும், குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் வரம். இதனை இயற்கைக்கு மாறாக செயல்பட்டு இழந்துவிடாதீர்கள்.