சன் பிக்சர்ஸ் கொடுத்த சரவெடி அப்டேட்.!

தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இதுவே தளபதி ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் நாழி முதல் அடுத்த 5 நாளைக்கு சர்க்கார் படத்தின் ஒர்கிங் ஸ்டில்ஸ் வெளியாகும் என அறிவித்துள்ளது.

இதனால் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு அடுத்தடுத்து ஒரே கொண்டாட்டம் தான். என்ன தளபதி ரசிகர்களே கொண்டாட தயாரா?