கருவுற்ற தாய்க்கு 10 மாத சிகிச்சை: பின் குழந்தையை காணோம்

வயிற்றில் குழந்தையே இல்லாமால் குழந்தை உள்ளது என கூறி பத்து மாதங்கள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை மாவட்டம் விரதானுர் அருகே உள்ள கோலிமேடு கிராமத்தில் வசித்து வருபவர்கள் யாஸ்மின் மற்றும் அவரின் கணவர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் நிறைவு பெற்றிருந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் யாஸ்மின் கருவுற்றதற்க்கான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் கருவுற்று இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து தன் ஏழ்மை நிலை காரணமாக தங்களது வீட்டுக்கு அருகே உள்ள பேரூராட்சி மருத்துவமனை சென்று பரிசோதித்த போது அவர்களும் கருவுற்றுள்ளார் என்பதை உறுதிபடுத்தி மூன்று மாதங்களாக வாரத்திற்க்கு ஒரு முறை பரிசோதனை செய்து குழந்தை நன்றாக வளர்ச்சி பெற்று வருவதாக கூறி சத்துடானிக் கொடுத்து அனுப்பி வைத்ததுள்ளனர்.

பின்பு மூன்று மாதங்கள் பேரூராட்சி மருத்துவமனையின் சிகிச்சைக்கு பிறகு அவர்களின் ஆலோசனையின்படி  இராசாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அரசு ராசாஜி மருத்துவமனையிலும் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரக்கியத்தோடு இருப்பதாக சொல்லி ஸ்கேன் எடுத்துள்ளனர். அதிலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லி பத்து மாதங்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பத்து மாத இறுதியில் மருத்துவமனை அழைப்பின் பேரில் பிரவசத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கே கணவன் மனைவி இருவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக மருத்துவர்கள் குழந்தை வயிற்றில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதிர்ந்து போனவர்கள் 10 மாதம் குழந்தை நன்றாக உள்ளது. அதன் வளர்ச்சி நன்றாக உள்ளது என்று சொல்லிவிட்டு இப்போது குழந்தை இல்லை என்கீறீர்கள்
அப்படியென்றால் கட்டி உள்ளதா என்று கேட்டதற்க்கு அதுவும் இல்லை என்று சொல்லியுள்ளர் மருத்துவர்கள்

இன்னும் அந்த பெண்னுக்கு வயிறு வீக்கமும் குறையாமல் குழந்தையே இல்லமால் சிகிச்சை எடுத்து கொண்டதால் உடல் பலவீணத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு நீதி கேட்டும் குழந்தையே இல்லாமால் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.