நெஞ்செரிச்சலா அலட்சியம் வேண்டாம்! இதை செய்யுங்க

நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகக் கார உணவு, துரித உணவை அடிக்கடி சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

இததகைய நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க மருந்து மாத்திரை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கையாகவே எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

நெஞ்செரிச்சலை குணப்படுத்த
  • நெஞ்சு எரிச்சலின் போது ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனனில் ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளதால் இது நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும்.
  • நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால் துளசி இலை சாறை அருந்தினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
  • சோம்பு ஜீரண சக்தி அதிக அளவு கொண்டது. நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் போட்டு சிறிது நேரம் மென்று தின்று வந்தால் உடனே சரியாகும்.
  • நன்கு அரைத்த பட்டையின் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் முற்றிலும் அடங்கும்.
  • மோர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.மேலும் கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
  • நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பொழுது அதிக அளவு தண்ணீர் அருந்துவதின் மூலம் சரி செய்யலாம்.
  • சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவை
  • வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
  • அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
  • சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.