உங்கள் நாட்டுக்கு திரும்பி போய்விடு: சுவிஸில் இனவெறிக்கு இலக்காகிய இளம்பெண்

சுவிட்சர்லாந்தில் பிரேசிலிய பெண்மணி ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு இலக்காகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கூட்டுறவு கிளை ஒன்றில் பிரேசிலிய பெண்மணி ஒருவர் சம்பவத்தன்று மாம்பழம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பழம் கனிந்ததா எனவும் சோதித்துள்ளார். மேலும் அதன் வாசனையை நுகர்ந்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதை வெகுநேரமாக கவனித்து வந்த சுவிஸ் பெண்மணி ஒருவர், மிருகங்கள் போன்று மாம்பழத்தை நுகர்ந்து பார்க்காதே என கோபத்துடன் கடிந்து கொண்டுள்ளார்.

மேலும் மாம்பழம் வேண்டும் என கேட்ட பிரேசிலிய பெண்மணியை, ஆப்பிரிக்க நாட்டுக்கே திரும்பி போய்விடுங்கள் என எச்சரித்துள்ளார்.

அந்த கூட்டுறவு கிளையில் பல சுவிஸ் பெண்களும் மாம்பழம் வாங்கும் ஆசையில், அதனை சோதனை செய்து பார்த்து வந்தனர்.

ஆனால் தம்மை மட்டுமே அவர் இனவெறியுடன் அணுகியதாக தெரிவித்துள்ள பிரேசிலிய பெண்மணி, மாம்பழம் என்றால் எனக்கு உயிர், அது எனது தாய்நாட்டை நினைவுக்கு கொண்டு வந்தது என்றார்.

கடந்த 2 ஆண்டுகளாக சுவிஸில் குடியிருக்கும் தாம், கணவரின் அன்புக்கு கட்டுப்பட்டு சுவிஸில் குடியிருப்பதாகவும், பாடசாலை ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தாம் எந்த புகாருக்கும் இல்லை எனவும், சிலர் இனவாத ரீதியாக நடந்து கொள்வது வருத்தமளிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முகம் தெரியாத அந்த சுவிஸ் பெண்மணி மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறித்த புகார் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.