நீர் தாங்கியில் விழுந்து 8 வயது சிறுமி பலி…

தனமல்வில – ஊவா குடாஓயா பிரதேசத்தில் நீர் நிறைக்கப்பட்டிருந்த தாங்கியொன்றில் வீழ்ந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

எட்டு வயதான குறித்த சிறுமி வீட்டின் முன்னாள் விளையாடி கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் சிறுமி தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.