கொங்கு அவித்த முட்டை அவியல்!

தேவையான பொருட்கள்

அவித்த நாட்டுக்கோழி முட்டை 6 ( பொடியாக கத்தியால் நறுக்கியது )
சின்ன வெங்காயம் 14 ( விழுதாக மையாக அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்ல கொஞ்சமாக
புதினா இலைகள் கால் கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் 3 ( விழுதாக மையாக அம்மிகல்லில் நசுக்கியது)
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி

செய்முறை
1. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும்.

2. அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

3. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4. பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக கூழ் போல் ஆகும் வரை வதக்க வேண்டும்.

6. அதில் அனைத்து பொடி வகைகளையும் சேர்த்துகோங்க நன்றாக கொச்சு போல் ஆகும் வரை மற்றும் எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

7. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள நாட்டுகோழி முட்டை துண்டுகளை சேர்த்துகோங்க நன்றாக மசாலாவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

9. தேவையெனில் கொஞ்சம் மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக பொன்னிறமாக சிவக்க கிளறவும்.

10. நன்றாக சிவந்து வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.