இலங்கையில் விஷப் பாம்புகளுடன் இளம் யுவதி ஒருவர் செய்யும் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
கம்பஹாவை சேர்ந்த பாக்யா மிஹிரனி, பல வகையான பாம்புகளுடன் நட்பாக பழகி வருகிறார்.
அவர் பாம்புகளுடன் செல்ல பிராணி போன்று விளையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான அனைத்து பாம்புகளையும் கையில் எடுத்து, உடம்பில் போட்டு இந்த விளையாடுவதற்கு அவர் பழக்கம் கொண்டுள்ளார்.
அவருக்கு பாம்புடன் பழக எந்த விதமான பயமும் இல்லை என குறிப்பிட்டுள்ளதுடன், அதனை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
எனினும் யுவதியின் துணிச்சலான செயற்பாடுகளை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர். எனினும், பாம்பு என்றால் பயப்படும் மக்களுக்கு மத்தியில் யுவதியின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டியுள்ளனர்















