பெண் வேடத்தில் யோகி பாபு… நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

சர்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை விஜய் கிள்ளுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படம் ‘சர்கார்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட யோகி பாபுவின் புதிய வீடியோ ஒன்றை வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆப் மூலம் யோகி பாபு பெண் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

கூடவே, யோகி பாபுவின் கன்னத்தை கை ஒன்று, ‘சோ க்யூட்’ எனக் கிள்ளுவது போன்றும், அதற்கு யோகி பாபு முறைப்பது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுடன் கூடிய பதிவில், ‘யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடியுங்கள்’ என வரலட்சுமி புதிர் போட்டுள்ளார்.

வரலட்சுமியின் இந்தக் கேள்வியினாலேயே அது விஜய் தான் என்பது மறைமுகமாகத் தெரிகிறது. இரண்டே நாட்களில் இந்த வீடியோவை இதுவரை 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.