பிக்பாஸ் 2 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஆரம்பத்தில் இருந்து புரியாத புதிராக இருப்பவர் பாடகி ரம்யா. எதையும் அவ்வளவு சீக்கிரம் பேசுவதில்லை, யாருடனும் நெருங்கி பழகாமல் இருந்தார்.
இந்த வாரம் அவர் வீட்டின் தலைவராக பொறுப்பு ஏற்றார். தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் திருடன்-போலீஸ் போன்ற ஒரு விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.
இதில் ஏதோ நடந்துள்ளது என்பது தெரிகிறது, இது மிகவும் கேவலமான விளையாட்டு, நான் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று அதிரடியை கிளப்பியுள்ளார் ரம்யா. அவரின் வாதத்தை ஏற்ற பிக்பாஸ் தலைவர் பதவியில் இருந்து விலக்கியதோடு அடுத்த வார எலிமினேஷன் நாமினேஷனுக்கும் அவர் தேர்வாகியிருப்பதாக பிக்பாஸ் கூறுகிறார்.
இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் இருக்கு இன்றைய நிகழ்ச்சியில் ஏதோ சுவாரஸ்யம் இருக்கு என கமெண்ட் செய்கின்றனர்.
தலைவிப் பொறுப்பிலிருந்து நீக்கப்படும் ரம்யா! ?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/yrCCjuYNeP
— Vijay Television (@vijaytelevision) 11 July 2018






