கோழி வந்திச்சா முதலில் முட்டை வந்துச்சா?’ இப்பிடியெல்லாம் பாடி ஆராச்சி பண்ணாம இந்த கோழி முட்டையை வச்சு இப்பிடியெல்லாம் உங்க அழகா மெருகூட்டலாம் என்று தெரிஞ்சு கொள்ளுங்க.
அதுக்கு முன்னாடி முட்டை பற்றி சில விஷயங்களை தெரிஞ்சு கொள்வோமா?
முட்டையில் நம் உடலுக்கு தேவையான புரதம், உயிர்ச்சத்துக்கள், இரும்புச் சத்து,பொஸ்பரஸ் போன்ற முக்கியமான 11 தாதுப் பொருட்களும் முட்டையில் இருக்கின்றன.
சரி இந்த முட்டையை அழகுக்கு அழகு சேர்க்க எப்பிடியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா?

- தலை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.
முட்டையில் புரதச் சத்து இரும்புச் சத்து ஆகியன அதிகம் காணப்படுவதால் முட்டை மஞ்சள் கருவை ஒலிவ் எண்ணையுடன் அடித்துக் கலக்கி மாஸ்க் செய்து அதை தலையில் பூசி அடியாழம்வரை மசாஜ் செய்து பின்பு ஊற வைத்து தலையை ஷாம்பூ போட்டு முழுக்கிக் கொள்வதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

- உடைந்த முடியை சரி செய்கின்றது.
தினமும் வெளியில் சென்று நாம் திரும்பும்போது நம் தலைமுடியில் தூசு திக்கைகள் பட்டு தலைமுடியானது உடைவுக்குள்ளாகின்றது. சிக்குப் பிடித்தும் போகின்றது அதைத் தவிர்ப்பதற்கு முட்டை, பழுத்த வாழைப்பழம், பால் ஆகியவற்றை நன்கு அடித்துக் கலக்கி தலையில் பூசி ஊற வைத்துப் பின் அலசி வந்தால் தலைமுடி உடைவதிலிருந்து தப்பிக்கலாம்.

R
- பேஸ் மாஸ்க்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒலிவ் ஒயில் மற்றும் தேன் கலந்து முகத்தில் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது இறந்த செல்களை அகற்றுவதுடனும் முகத்தை மிருதுவாகவும் ஆக்குகின்றது.

- முகச்சுருக்கம், முகப்பரு போன்றவற்றை இல்லாதொழிக்கப் பயன்படுத்தலாம்.
முட்டையின் வெள்ளைக் கருவைத் தனியே எடுத்து முகத்தில் பூசி வர முகச்சுருக்கம் இல்லாமல் போவதுடன் முகப்பருவினால் ஏற்படும் தொல்லையும் இல்லாமல் போய்விடும்.

- முகத்தில் உள்ள முடிகளை அகற்ற பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை கடலைமாவு, சீனி கலந்து பூசி நன்கு காய்ந்த பின் உரித்துவர தேவையற்ற முடிகள் நீங்கி விடும்.






