முடிகொட்டுதேன்னு கவலையா??

ங்களுக்கு முடி உதிரும் பிரச்சனை இருக்கிறதா? யோசிக்காதிங்க உங்களை அமேசான் காட்டுக்கெல்லாம் போக சொல்ல மாட்டேன். உங்க வீட்டிலேயே வளரும் செடிகளில் இதெல்லாம் முடி உதிர்வை தடுக்கின்ற மூலிகைகளா பயன்படுத்தலாம்னு பாக்கலாமா?

 

கற்றாழை
காற்றாழை தெரியுமா? அட நீங்க கடையில அலோவேரா ஜெல் தங்க அலோவேரா பேஸ் வோஸ் தங்கன்னு கேட்டு வாங்குவின்களே அந்த அலோவரதங்க. கற்றாழையின் மருத்துவப் பெயர்தான் அலோவேரா. அதை நீங்க உங்க வீடுகளிலேயே வளர்க்கலாம். வளர்க்கிறதுக்கு பெரிய செலவெல்லாம் ஆகாது.

அலோவேரா உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதன் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் அடியாழம்வரை சென்று ஊட்டமளிப்பதால் தலை முடி கொட்டுவது இல்லாமல் போவதுடன் முடி வளர்ச்சியும் அதிகரிக்கின்றது.

அலோவேராவை எப்படி தலை முடியில் பூச வேண்டும் தெரியுமா?
அலோவேராவின் ஒரு இலையை இரண்டாக்கப் பிளந்து நடுவில் உள்ள ஜெல் போன்ற பதார்த்தத்தை உச்சந்தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 1 மணித்தியாலங்களுக்கு ஊற விட்ட பின் சாம்பு போட்டு தலையை அலசுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் கிடைக்கும் பலன் அதிகம்.

 

செம்பருத்தி
எங்க ஊர்களில் வீட்டு பூந் தோட்டத்திலேயே வளரக்கப்படுகின்ற இந்த செம்பருத்தி செடி இலைகளையும் பூவையும் தேங்காயெண்ணெய்க்குள் இட்டு நன்கு காய்ச்சி சூடு ஆறியதும் தினமும் படுக்கச் செல்லும் முன் இந்த எண்ணெய் கலவையை முடியில் தடவிப் படுத்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக இருப்பதுடன் உதிர்வதையும் தடுக்க முடியும்

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் காணப்படுகின்ற விட்டமின் சி ஆனது உங்கள் தலைமுடியின் அடியாழத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றது.
நெல்லிக்காயை காச்சி வடிகட்டி எடுத்து எண்ணையாகப் பயன்படுத்தலாம்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையை தேங்காய் என்னை அல்லது ஒலிவ் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி வடி கட்டி சூடு ஆறிய பின் முடியின் ஆழம் வரை மசாஜ் செய்து பூசி வர முடி உதிர்வது குறைவதுடன் முடி அடர்த்தியாகவும் வளரும்.

கடைகளில் ஏறி இறங்கி கண்ட கண்ட எண்ணெய்களை வாங்குவதை விட வீட்டிலேயே செலவின்றி செய்யக் கூடிய இந்த மருத்துவ எண்ணெய்களை முயற்சித்து பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.