கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சற்று போராகவே சென்று கொண்டிருக்கிறது. முதல் சீசனை போல விறுவிறுப்பு இல்லை என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பிக் பாஸ் அரங்கில் இருந்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் இரவு நேரங்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியில் தெரிவதாகவும் குறிப்பாக பொன்னம்பலம் அவர்களை சாலி கிராமத்தில் மக்கள் பார்த்ததாகவும் கூறுகிறார்கள். இது உண்மையா என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் இது முற்றிலும் வதந்தி, பார்த்தவர்கள் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கலாமே என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் நீங்கள் அப்படியொரு புகைப்படத்தை காண்பித்து கேட்டிருந்தால் நான் கூனி குறுகி பதில் சொல்ல முடியாமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருப்பேன் என கூறியுள்ளார்.







