AAA இயக்குனரின் அடுத்த படம், சிம்புவுடன் இப்படி ஒரு கதையா, கேட்டால் அசந்துவிடுவீர்கள்

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் AAA. இப்படம் படுதோல்வியை சந்தித்தது, அதை தொடர்ந்து சிம்பு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என மூவருமே ஒருவரை ஒருவர் பேசியது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் AAA படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தானும், சிம்புவும் தற்போதும் நல்ல நட்பில் தான் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும், சிம்புவிடம் AAA சமயத்திலேயே ஒரு ஸ்பை த்ரில்லர் கதை சொன்னதாகவும், அப்படத்தில் சிம்பு ஒரு பாகிஸ்தானியாக நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படம் எப்படியும் சிம்பு தற்போதுள்ள படங்களை முடித்துவிட்டு இதில் நடிக்க வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.