மீசாலையில் சற்று முன்னர் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதான வீதியூடாக பயணித்த ஹயஸ் வானகம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பஸ் தரிப்பிடத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.இதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமான சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை ஏற்றிக்கொண்டு குறித்த வாகனம் யாழ் நோக்கிச் செல்லும் வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இண்மைக்காலமாக குடாநாட்டில் இவ்வாறான தேவையற்ற விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.







