புத்தகத்தில் கூறியுள்ள மர்ம மரண இரகசியங்கள்… பயப்படவேண்டாம்

கால கடிகாரத்தில் (மரணம்), பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, அனைவரும் சரிசமமே. மரணம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், அதனை பற்றிய உரையாடலில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதற்கு காரணம் அனைவருக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே. சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுபவரா நீங்கள்?

அப்படியானால் சரியான பக்கத்திற்கு தான் நீங்கள் வந்துள்ளீர்கள். ஆம், மரணத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான ரகசியங்களை பற்றி நாங்கள் கூற போகிறோம். இதனை உயர்த்தி காட்டியது வேறு யாருமல்ல; மரணத்தின் கடவுளான எமதர்மராஜனே.

பழங்கால சமயத்திரு நூல்களின் படி, மரணம் மற்றும் ஆத்மா பற்றிய இரகசியங்களை நாச்சிகேட்டா என்ற குழந்தையும் எமதர்மராஜனும் கலந்துரையாடியுள்ளனர். நாச்கேட்டாவிடம் எமதர்மராஜன் கூறிய மரணத்தைப் பற்றிய சில ரகசியங்களை பற்றி நாமும் தெரிந்து கொள்வோமா?

நாச்சிகேட்டாவின் மூன்று வரங்கள்

எமதர்மராஜனை சந்திக்க நாச்சிகேட்டா சென்ற போது, அவரிடம் மூன்று வரங்களை அவன் கேட்டான். அவன் கேட்ட முதல் வரம் – தன் தந்தையின் அன்பை பெறுவது, இரண்டாவது வரம் – அக்னி வித்யா பற்றி தெரிந்து கொள்வது, மூன்றாவது வரம் – மரணம் மற்றும் ஆத்மாக்யன் (ஆத்மாவின் அறிவு) பற்றி தெரிந்து கொள்வது. அவனுடைய கடைசி வரத்தை நிறைவேற்ற எமதர்மராஜன் விரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தையோ பிடிவாதமாக இருந்தது. அதனால் மரணத்தை பற்றிய இரகசியங்களையும், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதையும் அவனிடம் தெரிவிக்க எமதர்மராஜன் சம்மதித்தார்.

சமயத் திருநூல்களின் படி, ஓம் (ஓங்கார்) என்பது பரமாத்மாவின் விஸ்வரூபம் என்பதை எமதர்மராஜன் வெளிப்படுத்தினார். மனிதனின் இதயத்தில் தான் பிரம்மா குடி கொண்டுள்ளார் என்பதையும் அவர் கூறினார்.

மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனுடைய ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை எமதர்மராஜன் கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆன்மாவின் அழிவிற்கும் உடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது?…