முதன்முதலாக வானியளாளர்களால் பிடிக்கப்பட்ட நேரடி புகைப்படம்!

முதன் முதலாக வானியளாளர்கள் மகள் கோளொன்றினது நேரடிப் புகைப்படத்தை படம்பிடித்துள்ளனர்.

இவ் ஆரேஞ்சு நிறமான கட்டையான கோள் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்து.

இது தனது நட்சத்திரத்தை சூழவூள்ள புகைப் பிரதேசத்திலிருந்து தனக்கான ஒழுக்கை உருவாக்கத் தொடங்கும் போதே படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நட்சத்திரமானது PDS 70 எனப்படுகிறது. வானியளாளர்கள் அதனைச் சுற்றியூள்ள ஒழுக்கில் கோளின் இருக்கை பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இக் கோளிற்கு PDS 70b எனப் பெயரிட்டுள்ளனர்.

நட்சத்திரங்கள் புதிதாக தோன்றுகின்றன. இவை தூசு, பாறைகள், வாயூக்கள் கொண்ட தட்டு மூலம் ஒழுக்கில் பயணிக்கப்படுகின்றன.

அவ்வாறு பயணிக்கையில் ஒன்றௌடோன்று மோதுவதாலும், துணிக்கைகளை சேகரிப்பதாலும் படிப்படியாக கோள்களை தோற்றுவிக்கின்றன.

இக் கருத்தை வானியலாளர்கள் ஆழமாக நம்பியிருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவது சிரமமானதாகவிருந்தது.

காரணம் சூரிய குடும்பத்திற்கு வெளியே தொலைவிலுள்ள கோள்களை படம்பிடிப்பது மிக கடினம். தொலைநோக்கிகள் மங்கலான புகைப்படங்களையே தருவிக்கும். குறிப்பாக அவற்றிலிருந்த தெறிக்கும் ஒளியானது அதனது நட்சத்திரத்தின் பிரகாசத்தினால் மறைக்கப்படுகிறது. இதுவே பகல் வேளைகளில் நட்சத்திரங்கள் தென்படாததற்கும் காரணம்.

PDS 70 நட்சத்திரத்திற்கும் அதன் சூழவூள்ள தகட்டுக்குமிடையில் போதுமான தூரம் கடந்த 2012 அளவில் கண்டறியப்பட்டது. எனவே அதற்கான கோளை படம்பிடிக்கும் முயற்சியில் வானியலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் ஒளியின் சில அலைநீளங்களை வடிகட்ட பிரத்தியேக வடிகட்டிகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் திணிவு வியாழனிலும் பல மடங்கு பெரிது. வெப்பநிலை 1200 கெல்வின். இது அதன் சூரியனைச் சுற்றிவர 120 புவி நாட்கள் எடுக்கிறது.