பிரபல நடிகையின் நழுவிய உடையை சரிசெய்த நடிகர் சித்தார்த்! வீடியோ

அம்பானியின் மகன் ஆகாஷின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஹிந்தி நடிகை பிரணிதியின் நழுவிய உடையை சக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா சரிசெய்து உதயுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் – ஷ்லோகா மேத்தாவுக்கும் கடந்த சனிக்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி, பாலிவுட் நடிகைகல் வித்யா பாலன், கஜோல், திஷா பதானி, அனில் கபூர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரணிதி சோப்ரா திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து இறங்கிய போது அவரது உடை நழுவியுள்ளது.

இதையடுத்து அவர் அருகிலிருந்த நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, பிரணிதியின் உடையை சரிசெய்து அவருக்கு உதவியுள்ளார்.

இதுத்தொடர்பான வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சித்தார்த். தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, காரிலிருந்து இறங்கியபோதே ஆடை நழுவியதால் அசெளகரியத்தில் அதனை சரி செய்துகொண்டிருந்தார் பிரணிதி. இதையடுத்து சித்தார்த் செய்த உதவியால் பெரும் தர்மசங்கத்திலிருந்து அவர் தப்பித்துள்ளார்.