பொதுவாகவே எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் நேரம் காலம் பார்த்து செய்வது வழக்கம் தானே.. அந்த வகையில், ஒரு சில நாட்கள் சிலவற்றிற்கு சரியாக அமையாது…
ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்களில் தொடங்கப்படும் செயல்கள் அமோக வளர்ச்சி கண்டு வெற்றி மேல் வெற்றி அடையும்…
நமக்கும் செல்வம் மேல் செல்வம் வந்து கொட்டும்..மன நிறைவும் இருக்கும்..எல்லா ஐஸ்வர்யமும் வாழ்வில் அடைந்த ஒரு சந்தோசம் இருக்கும்…
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு சில நாட்களில் ஒரு சில காரியங்களை செய்ய கூடாது என இருக்கிறது அல்லவா..?
அந்த வகையில் நாளை ஜூலை மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் கூடாத இரண்டு நாட்கள் உள்ளது…. இந்த இரண்டு நாட்களில் எதாவது நீங்கள் நல்ல காரியங்களை செய்ய முன்னதாகவே தேதி குறித்து வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே படியுங்கள்…
ஜூலை மாதம் 7,8 ஆம் தேதி கூடா நாட்கள்….
ஜோதிட சாஸ்த்திரப்படி இந்த நாட்களில்…..
புது வேலைகளை தொடங்கக்கூடாது
புது பொருட்கள் வாங்க கூடாது.
நல்ல முடிவை எடுக்க கூடாது.
சுப காரியங்கள் வேண்டாம்.
அப்படியே ஒரு வேளை இந்த நாட்களில் தான் செய்ய வேண்டும் என முன் கூட்டியே முடிவெடுத்து தேதி குறிப்பிடப்பட்டு இருந்தால், இந்த இரண்டு நாட்களில், விடியற்காலை மூன்று மணி முதல் ஆறு மணி வரையில் தொடங்கி வைக்கலாம்.