நீங்கள் அதிகாலையில் எழும்புவதால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா…….?

மன அமைதி

நீங்கள் அதிகாலையில் எழும்பும் போது சூழலில் சத்தம் இருக்காது. வாகன சத்தமோ இல்லது வீட்டில் உள்ளவர்களின் சத்தமோ இருக்காது நீங்களும் உங்கள் எண்ணங்களுமே இருக்கும்.நீங்கள் இப்படி அமைதியான முறையில் எழும்புதல் ஒரு நல்ல நாளின் தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.

நாள் முழுதும் நீங்கள் அமைதியான மனதுடன் இருப்பீர்கள். மாறாக நீங்கள் தாமதமாக எழும்பினால் அதிகாலையிலேயே ஓட்டம் தான்.. பின் நாள் முழுவதும் ஓடவேண்டியிருக்கும்.

அதிகரித்த உற்பத்தித்திறன்அதாவது நீங்கள் அதிகாலையில் எழுந்து உங்களை தயார்ப்படுத்தி ஒரு வேலையில் ஈடுபடும் போது, தாமதமாக எழும்புவதை விட இரட்டிப்பு வேலை செய்யமுடியும் எனவும், அவ் வேலையில் கூடிய கவனமும் இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.உங்களை சுற்றி உள்ளவர்களிலும் பார்க்க அதிகமாக வேலை செய்ய முடியும்.

ஒரு புதிய நாளை நல்ல தொடக்கத்தோடு ஆரம்பிக்கலாம்.

அதாவது நீங்கள் அதிகாலையில் எழும்பும் போது உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும் எனவே நீங்கள் தியானம், யோகா,உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.அவை ஒரு புத்துணர்வை வழங்கும். அதிகாலையில், அமைதியான மனதோடு தியானம் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடும் பொழுது, உங்கள் சிறந்த எண்ணங்களும் நீங்களுமே செயற்படுவீர்கள் அப்பொழுது நீங்கள் உணரும் உணர்வு உங்களுக்கு திருப்தியை கொடுப்பதாக அமையும்.

சிறந்த காலை உணவுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

நீங்கள் தாமதமாக எழும்பும் பொழுது உங்களுக்கு சிறந்த காலையுணவை தயாரிக்கவோ அல்லது உண்ணவோ நேரம் இருக்காது. நீங்கள் அதிகாலையில் எழும்புவதால், உங்களுக்கான சிறந்த ஆரோக்கியமான உணவை தயாரிக்கதோடு நீங்கள் உண்ணுவதற்கும் நேரம் கிடைக்கும் காலை உணவு என்பது தவிர்க்கப்பட கூடாதது எனவே அதிகாலையில் எழும்புதல் சிறப்பு.

உங்கள் நாளை திட்டமிடலாம்

நாள் திட்டமிடல் என்பது முக்கியமான ஒரு விடயமாகும் நீங்கள் அதிகாலையில் எழும்புவதால், அன்றைய நாளை நீங்கள் உங்களுக்கேற்றவாறு திட்டமிட்டு, அதன்படி நடக்கலாம்.இதனால் உங்களுக்கான நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

சக்தி அதிகரிப்பு

அதிகாலை எழும்புவதனால் உங்களிடையே ஒரு நிதானம் உருவாகும். பரபரப்புத் தன்மை குறைவடையும். அதனால், எதையும் கையாளும் ஆற்றல் கிடைக்கும்.