குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

குடும்பத்துடன் சுற்றுலா போக திட்டம் போட்டு இருக்கிங்களா அப்போ உங்க ஸ்மார்ட் போனில் இந்த செயிலிகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

கோடை ஆரம்பித்தாலே போதும் வெயிலிருந்து தப்பிக்க அனைவரும் அலைமோதுவோம். அப்படியே ஏதாவது குளுர்ச்சியான இடங்களுக்கு போய்விட்டு வரலாம் என்று பலரது மனம் ஏங்கும். இத்தகைய சுற்றுலாவால் குடும்பத்தில் புத்துணர்வையும், நல்லுறவையும் ஏற்படுத்தும்.

சுற்றுலா போவதுக்கு முன்பு அனைத்து முன்பே எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சென்றால், சுற்றுலா இன்ப சுற்றுலா ஆக அமையும். இல்லையெனில், சுற்றுலா சென்றதே பெரிய தலைவலியாய் ஆகிவிடும்.

இவ்வாறு எதும் ஆகிவிடாமல் சுற்றுலாவை இன்பச் சுற்றுலாவாக மாற்ற உங்களுடைய மொபைலில் சிறந்த டூர்-களுக்கான செயலிகளை டவுன்லோடு செய்து அது வழிநடத்தும் முறையை கடைபிடித்தாலே போதும். சுற்றுலா சொர்க்கமாக அமையும்.

அதற்கான சில சிறந்த செயலிகளின் தகவல்கள்,

கூகுள் டிரான்ஸ்லேட்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியை டவுன்லோடு செய்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான மொழி, நேரம் ஆகியவற்றை துல்லியமாக மாற்ற உதவும்.

சூம்கார்

பயணங்களில் சுலபமாக வாடகை முறையில் கார் எடுப்பதுக்கு வசதியாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மணி, நாள், வாரம், மாதம் எனும் அடிப்படையில் காரை வாடகைக்கு எடுக்கலாம். சொந்த காரில் சுற்றுலா சென்ற திருப்தியை இது கொடுக்கும்.

டிராவ்கார்ட்

உலகித்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களுக்கு விமானத்தில் செல்வதுக்கும், அதன் தொடர்பான பணிகளுக்கு டிராவ்கார்ட்

மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டிக்கெட் உறுதிப்படுத்துதல், வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தனி விமான பயணம் சேவை உள்ளிட்ட விமான பயணம் தொடர்பாக இந்த டிராவ்கார்ட் செயிலியை பயன்படுத்தலாம்.

கிளியர் ட்ரிப்

சுற்றுலா செல்வதுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் முன்பதிவு செய்வதுக்கு கிளியர் ட்ரிப் செயலி மிகவும் நம்பகமானது. கோடை விடுமுறை பயண திட்டங்களை சரியாக வகுத்து அளிக்கும். இந்த செயலியில், பயணத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அனுபவங்கள், மிகவும் பிடித்த இடங்கள் குறித்து பதிவிடலாம்.

சாட்புக்ஸ்

சுற்றுலா படங்கள் சிறந்த நினைவுகளாக இருக்கின்றன. சமீபத்திய விடுமுறை பயணத்தில் எடுத்த படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவேற்றும். இந்த படங்களை சாட்புட் செயலி மூலம் சிறந்த ஆல்பமாக மாற்றிக் கொடுக்கும். இந்த செயிலி பேஸ்புக், இண்டாஸ்கிராம் உடன் இணைத்தால் போதும். தானாகவே சுற்றுலா படங்களை சிறந்த புகைப்பட ஆல்பமாக மாற்றிக் கொடுத்துவிடும்.

டிராவல்யாரி

பயணத்தை எளிதாக்குவதுக்காக டிராவல்யாரி எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ் முன்பதிவு, விடுதிகள், சுற்றுலா மற்றும் சாகச நடவடிக்கைகள் ஆகிய உதவிகளுக்காக இந்த தளத்தை அணுகலாம்.

சூமேட்டோ

எந்த சுற்றுலா பயண திட்டத்திலும் உணவு முக்கிய பகுதி வகிக்கிறது. சுற்றுலா நகரம் மற்றும் வெளிநாடுகளில் எந்தெந்த ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் எந்த விதமான உணவு கிடைக்கும் என்பதை அறிவதுக்காக சூமேட்டோ செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி இந்த செயலி மூலம் உணவு ஆர்டர் கொடுத்தால், சிறந்த ஆப்பர் கிடைக்கும்.