இன்றைய ராசிபலன் (30/06/2018)

  • மேஷம்

    மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்ப வருமானத்தை உணர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாய மும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • தனுசு

    தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனநிறைவு கிட்டும் நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். தன்னம்பிக்கை குறையும். முன் கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத் தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: எதிர்பார்த்த காரியங் கள் அலைச்சலின் பேரில் முடியும். முக்கிய கோப்பு களை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்து ழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மீனம்

    மீனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத் தில் வி.ஐ.பி கள் வாடிக்கையாளர்களாவார் கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். சிறப்பான நாள்.