தாங்க முடியாத காது வலிக்கு வீட்லேயே இருக்கு நல்லெண்ணெயுடன் பூண்டு.

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் கைக்குழந்தைகளுக்கு காது வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதாலும், மூக்கை சிந்துவதாலுமே வரும்.

மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காது வலி வந்தால் உடனே காது‌க்கு‌ள் எதையாவது போ‌ட்டு நுழைக்கக் கூடாது. இதனால் காது‌க்கு‌ள் ‌கிரு‌மி‌‌த்தொ‌ற்று தான் ஏ‌ற்படுமே தவிர சரியாகாது.

மேலும் இந்த காது வலி பொதுவாக இரவிலேயே வருவதால், என்ன செய்வதென்று தெரியாது. அப்போது இதற்கு நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியம் நன்கு கை கொடுக்கும். அது என்னென்னவென்று பார்க்கலாமா?

தேங்காய் எண்ணெய்
தேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும்கூட என்கிறது சித்த மருத்துவம் காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு, மிதமான சூட்டில் காதில் விட்டால், காதில் இருக்கும் புண் ஆறி, வ‌லி குறையு‌ம்.

நல்லெண்ணெய்
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். நல்லெண்ணெயுடன் பூண்டும் ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.

தூதுவளை
இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை இது .வாரம் இருமுறை இதன் இலையை ஏடுத்து ரசம் , கஷாயம் , அல்லது சூப் வைத்து குடித்தால் தீராத சளி , இருமல், கொலைகள் அத்தனையும் விரட்டி அடித்துவிடும்.தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரைக் குடித்தால் காது வலி குறையும்.

தாழம் பூ
தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியுடையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளிகளை கா‌தி‌ல் ‌விட்டால் காது வ‌லி, கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

மருதோன்றி
இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.மருதா‌ணியின் வேரை நசு‌‌க்‌கி‌ அதில் வரும் சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட்டால், காது வ‌லி ‌தீரு‌ம்.

கிராம்பு
கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.கொஞ்சம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை போட்டு சூடு செ‌ய்து, பின் அ‌ந்த எ‌ண்ணெய்யை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் விட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்க, காது வலி பறந்தே போகும்.