இந்த பானங்களை குடிக்கவும் உடல் எடை தானாக குறையும்!

என்ன தான் தேடிப்பிடித்து டயட் பின்பற்றினாலும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான் நீங்கள் சாப்பிடும் உணவு முறையாக செரிக்கப்பட்டு அதிலிருக்கும் சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

தொடர்ந்து தண்ணீர் குடித்தால் சிலருக்கு ஒமட்டல் ஏற்படும். இப்படி தண்ணீர் அதிகமாக குடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்களுக்காக இந்த மாற்ற யோசனைகள். இது தண்ணீர் செய்கிற வேலையை செய்வதுடன் உடல் எடையை குறைப்பதற்கும் உதவி செய்கிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஓர் அருமருந்து என்று கூட சொல்லலாம். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

லெமன்
இது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம், தேனில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தண்ணீர் குடித்த நிறைவைத் தருவதுடன் உடல் எடை குறைக்கவும் பெரிதும் உதவிடுகிறது.

ப்ளாக் காபி
உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்க இதனை குடிக்கலாம். பால் சேர்க்காத வரக்காபி கலந்து கொள்ளுங்கள் அத்துடன் ஒரு எலுமிச்சை துண்டு சேர்த்து வெள்ளைச்சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

மஞ்சள் பால்
சிலர் காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்ப்பட்டால் மட்டுமே பாலில் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர உடல் எடை குறைக்க நினைக்கிறவர்களும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

இவை உங்கள் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவிடும்.

இதனைக் குடிப்பதால் நிம்மதியான தூக்கமும் வரும் என்பதால், தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் ஒரு கிளாஸ் மஞ்சள் பால் குடிக்கலாம்.

சீரகம்
சீரகம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அது எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் குடிக்க வேண்டிய தண்ணீரை மொத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள்.

அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கலாம். வேண்டுமானால் அதில் புதினா இலைகளை சேர்க்கலாம்