மனிதனின் உற்ற நண்பனாக விளங்கும் ஒரு விலங்கு நாய். ஆனால் சில சமயங்களில் நாய்கள் மனிதனுக்கு ஒரு தொந்தரவாகவும் உள்ளன. குறிப்பாக அவை மனிதனை கடிப்பதால் பலவேறு பாதிப்புகள் மனிதனுக்கு உருவாகிறது.
நாய் மனிதனை கடித்துவிட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
நாய் ஒரு நன்றியுள்ள விசுவாசமுள்ள பிராணி தான். ஆனால் எந்த அளவிற்கு இதன் விசுவாசம் உள்ளதோ, அதே அளவிற்கு, தீங்கும் விளைவிக்கிறது.
தெரு நாய்களுடன் சண்டையிடும்போது அல்லது ஒருவரை துரத்திக் கொண்டு ஓடும் போது, அவற்றிடம் மாட்டிக் கொள்ளும் ஒருவரின் நிலைமை, மரணத்தை விட கொடுமையானது.
நாய்களிடம் அகப்பட்டால் அதன் பற்களும் நகங்களும் மனிதனை பதம் பார்த்து விடும். இத்தகைய பயங்கரமான நாய் கடியில் இருந்து நிவாரணம் பெற சில எளிய மற்றும் விரைவான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றிப் பற்றி தெரிந்து கொள்வதால் நாய் கடி உண்டானவுடன் உடனடி முதலுதவியாக இதனை மேற்கொள்வதால் தீவிர அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.
நாய் கடியால் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த வாழை இலை ஒரு சிறந்த தீர்வாகும்.
வாழை இலையில் அழற்ச்சியைப் போக்கும் தன்மை மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. நாய் கடித்தவுடன் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய சிகிச்சை இதுவாகும். ஒரு வாழை இலையை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
இதனை அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தண்ணீர் மற்றும் பெண்ட்டோனைட் களிமண் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை காயம் ஏற்பட்ட இடத்தில் மென்மையாக தடவவும். சில மணி நேரங்கள் அந்த மருந்து காயத்தின் மேல் இருக்கட்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த மருந்தை காயத்தில் போடவும். விரைவில் இந்த காயம் குணமடையும். காயம் உள்ளவரை இந்த மருந்தை பயன்படுத்தலாம்






