இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட துணை ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்கவுக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்கள் வழியாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய எந்த சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட துணை ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக எதனையும் கூறவேண்டியதில்லை.
சிறந்த பொருளாதார நிபுணரான கலாநிதி வீரசிங்க, நான் ஆளுநராக பதவி வகித்து வரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய வங்கியின் பணிகள் சம்பந்தமான நடவடிக்கைகளில் விசேட பங்களிப்பை வழங்கி வரும் அதிகாரியாவார்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் எந்த சாட்சியங்களையும் முன்வைக்கவில்லை என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புவதாகவும்” இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.






