பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் பூமியில் தோன்றுவதற்கான அறிகுறிகள்

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களிக்ல் இறுதியில் தோன்றும் அவதாரம்தான் கல்கி அவதாரம்.

கல்கி அவதாரம் தர்மம் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், அசுரர்களின் கோரத் தாண்டவத்தின் பிடியில் இருக்கும்போது பூமியில் தோன்றும்.

எட்டாவது அவதாரமான பகவான் கிருஷ்ணன், எப்போது தர்மம் அழிக்கப்படுகின்றதோ, அப்போது அதனை நிலை நாட்ட அவதாரம் எடுப்பேன் என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார். இது பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்கி அவதாரம் உடனே எல்லாம் தோன்றாது. எந்த சமயத்தில் எந்த காலக்கட்டத்தில் தோன்றும் என விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

44தோன்றும் நேரம் :

கலியுகம் மொத்தம் 432000 நடைபெறும். அதன் பின்னரே கல்கி அவதாரம் தோன்றும். இப்போது கலி தொடங்கி 5000 ஆண்டுகளே ஆயிருக்கிறது. இன்னும் பல ஆயிர ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். கலி முற்றும் போது நாட்டில் அதர்மம் தலைவிரித்தாடும்.

கல்கி அவதாரம் தோன்றுவதற்கான முதல் அறிகுறிகள்
உலகம் மோசமானவர்களின் பிடியில் இருக்கும். கொடுங்கோல் ஆட்சியும், அநியாயங்களும் பகிரங்கமாக நடக்கும். அப்போதுதான் கல்கி அவதாரம் தோன்றும்.

இந்தியாவின் முப்பெரு நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி முற்றிலும் வற்றி, நீரில்லா பாலைவனம் போல் காட்சியளிக்கும்.
உலகில் ஏறக்குறைய எல்லாரும் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

அனைவருக்கும் தகாத உறவுகளைக் கொண்டிருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தாம்பத்திய உறவுகள் சாதரணமாக வெளிப்படையாக இருக்கும்.
பெண் குழந்தைகள் சிறிய வயதிலேயே பூப்பெய்து விடுவார்கள். மனிதர்களின் ஆயுட்காலம் குறையத் தொடங்கும்.

கணவன் மனைவி எப்போதும் சண்டையிட்டுக் கொள்வார்கள். கடவுள் நம்பிக்கை வெகுவாக குறைந்திருக்கும்.

பூமி மிகச் சூடாக இருக்கும். நட்சத்திரங்கள் தங்கள் பொலிவை இழந்திருக்கும்.

மகாபாரத இதிகாசத்தில் , ரிஷி மார்க்கெண்டேயன், பாண்டவர்களில் மூத்தவரான தர்மரிடம் சொன்னது போல், கலியுகம் முடியும்போது கல்கி ஒரு பிராமண பெற்றோர்க்கு மகனாக பிறப்பார்.

கல்கி அவதாரம் தோன்றும்போது நிலா அவிட்ட நட்சத்திரத்திலும், சூரியன் சுவாதி நட்சித்திரத்திலும்இருக்கும்.

வியாழன் பூராட நட்சத்திரத்திலும், சனி துலாம் லக்னத்திலும் என எல்லா கோள்களும் சரியான நிலையில் அமைந்திருக்கும். கேது விருச்சிகத்தில் அமைந்திருக்கும். இது ஒரு வெள்ளைக் குதிரையில் அவர் அமர்ந்திருப்பதை உணர்த்துகிறது.43

கல்கி இந்தியாவிலிருந்து இலங்கை மண்ணில் சென்று சில காலம் தங்குவார். கலியுகத்தின் அக்கிரமங்களை நிர்மூலமாக்கவே இந்த பயணமாக இருக்கும் என்று இதிகாசங்களில் விரிவாக சொல்லப்படுகிறது.

கலியுகம் முடிந்ததும் சத்ய யுகம் உருவாகும் க்ரித யுகம். அந்த யுகத்தில் சத்தியம் மட்டுமே மேலோங்கும். பொன் பொருளை எவரும் சீண்ட மாட்டரகள்.

நியாங்களாக எல்லாமே நடக்கும். சொர்க்கம் போல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.