குழந்தையை இப்படி மோசமாக தூக்குவதா! திட்டி தீர்த்த மக்கள்

பாலிவுட் நடிகர் Tusshar Kapoor தனது மகனின் Laksshya இரண்டாவது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தை பிறந்த அன்று எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லட்டு, நீ எனது வாழ்வில் வந்ததால் அனைத்தும் மாறிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தில், துணியில் சுற்றிவைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு கையால் அசால்ட்டாக தூக்கிவைத்துள்ளார். பார்ப்பதற்கு ஏதோ ஒரு பொருளை அலட்சியமாக தூக்கிவைத்துள்ளது போல இருந்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த சமூகவலைதளவாசிகள், குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து, ஒரு குழந்தையை எப்படி தூக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு தந்தை என்ற பொறுப்பில்லாமல் இப்படியா மோசமாக குழந்தையை தூக்குவீர்கள் என திட்டியுள்ளனர். மேலும் உங்கள் குழந்தை வளர்ந்த பின்னர்,எப்படி ஒரு குழந்தையை தூக்க வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்குவான் என கூறியுள்ளனர்.