ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. சர்ச்சையான பெண்ணாக அறியப்பட்ட ஜூலிக்கு சினிமாவிலும் சர்ச்சையான வேடங்களே வருகின்றன.
பல படங்களில் கமிட் ஆகி நடத்திவருகிறார். தற்போது நீட் தேர்வில் பலியான மாணவி அனிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார். மேலும் அம்மா தாயி என்ற படத்தில் அம்மனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஜூலி விரதம் இருந்து நடித்துள்ளார், மேலும் படபிடிப்பின் போது ஓட்டலில் தங்காமல் கோவிலிலேயே தங்கியுள்ளார். இந்த படம் வரும் ஆடி மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.