அதிகமாக வலிக்கிறது: வருத்தம் தெரிவித்த ரஜினி!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

பின்னர், அங்கிருந்து சென்னை திரும்பிய அவர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் தான் உள்ளே புகுந்து பொலிசை தாக்கினார்கள் என்றும், பொலிசை தாக்குவதை நான் ஒரு போது ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கருத்தை பதிவு செய்தார்.

ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக, அதிமுககட்சிகள் ரஜினிகாந்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தனர். தமிழகத்தின் சில இடங்களில் போராட்டமும் நடந்தது.

இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதாவது, அது அவருடைய கருத்து. போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாகத்தான் இங்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சாரும் போராட்டமே கூடாது எனச் சொல்லவில்லை.

காலையில் அவரிடம் பேசினேன். போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை. ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார் என கூறியுள்ளார்.