ஜொலிக்கும் பளபளப்பான சருமத்தை பெற்றிட இவற்றை உண்ணுங்கள்….!

பளபளப்பான தோல்களை பெற நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம் ஆனால் செயற்கை பூச்சுக்களால் பக்கவிளைவுகளே அதிகம் பின்வரும் பொருட்களை உண்பதன் மூலம் பளபளப்பான சருமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சல்மன் வகை மீன்

இவ் வகை மீனில் அதிகளவான சத்துக்கள் உள்ளது.இது தசைகளுக்கான செழுமையை வழங்கி அதை சிறப்பான ஒரு நிலைக்கு கொண்டுவரும்.

பசளி,முட்டைக் கோவா,கோவா


பசளி,முட்டைக் கோவா,கோவா போன்ற பச்சை உணவுகள் வயதாகும் தோற்றத்திலிருந்து குறைக்க உதவும் மேலும் இவற்றை உண்பதனால் சுருக்கங்கள் மறையும். மற்றும் தோலில் காணப்படும் வீக்கங்கள்,தழும்புகள் போன்றன மறையும்.

திராட்சைப்பழம்

திராட்சைப்பழத்தில் விட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. மேலும் இது சூரியக் கதிர் மற்றும் மாசுக்களால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதோடு சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

சிப்பி

இந்த சிப்பி அனைவராலும் விரும்பப்படுவதில்லை இருப்பினும் இது இறந்த கலங்களை அகற்றி தோலை சுத்தப்படுத்துவதோடு பழுதடைந்த கலங்களை திருத்த உதவும்.மேலும் இது தலை முடி நக வளர்ச்சியிலும் கண்பார்வையிலும் உதவும்.

வால் நட்

அதில் உடலுக்குத் தேவையான கொழுப்பமிலங்கள் உண்டு மேலும் தோலின் பளபளப்புக்கு அவசியமான ஒமேகா காணப்படுகிறது இது தோலின் மிருதுவாக்கலுக்கும் பளபளப்பிற்கும் உதவும்.

தக்காளி

தக்காளியில் விட்டமின் சி அதிகமாக உள்ளது இது தோலை மாசு மருக்களில் இருந்து தடுத்து அழகிய மிருதுவான தன்மையை வழங்குகிறது.மேலும் சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவதோடு பொழிவான சருமத்தையும் பெறலாம்.

முட்டை

முட்டை ஒரு சிறந்த அழகுபடுத்தும் பொருள்.முட்டையை பயன்படுத்தி வரண்ட சருமத்தை பொழிவுறச்செய்யலாம். மேலும் சருமத்தில் உள்ள தழும்புகள், அடயாளங்களுக்கு இது சிறந்த தீர்வை கொடுக்கும்.