கவர்ந்திழுக்கும் கண்களை பெற்றிட இவற்றை செய்யுங்கள்…!!

அழகு என நினைக்கும் போதே முதலில் நாம் எடுப்பது கண்களைத்தான். ஒருவர் எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும் கண்கள் கவர்ச்சியாக அல்லாவிடில் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.எனவே கண்களுக்கான கூடிய கவனம் தேவை இங்கு நாம் இன்றும் எதிர் விளைவை அளிக்காத இயற்கை முறையில் கண்களை அழகுபடுத்துவதை தருகிறோம்.

வெள்ளரிக்காய்த் துண்டு அல்லது வெள்ளரிக்காய் கூழ்

வெள்ளரிக்காய்த் துண்டு அல்லது வெள்ளரிக்காய் கூழை மூடிய கண்களில் வைத்து 20 நிமிடங்களுக்கு விடவேண்டும் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைவதோடு கண்களின் தோல் வரட்சி அகற்றப்படும்.

உருளைக்கிழங்கு,வெள்ளரிக்காய்,எலுமிச்சம் சாறு,மஞ்சள் சேர்ந்த கலவை

உருளைக்கிழங்கு சிறு துண்டு ,வெள்ளரிக்காய் சிறு துண்டுடன் மஞ்சள், எலுமிச்சம் சாறை சேர்த்து கலந்து அவற்றை கூழ் போன்று தயாரித்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும் பின் 15நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரினால் கழுவ வேண்டும். அதனால் கண்களுக்கு ஒரு புது புத்துணர்ச்சி கிடைக்கும் மேலும் இமை வளர்ச்சியையும் தூண்டும்.

பால்

பாலைக் கொண்டு உங்கள் கண்களை சுத்தப்படுத்தலாம் அதாவது இதற்கு குளிரூட்டிய பால் சிறந்தது. பாலில் பஞ்சை நனைத்து கண்களை துடைக்க வேண்டும்.பின் மீண்டும் பாலில் நனைத்த பஞ்சை கண்களில் வைத்து 30நிமிடங்கள் வரை விடவேண்டும்.பின்னர் நீரினால் கழுவிவிட வேண்டும்.இது கண்களை சுற்றி படிந்துள்ள மாசு மருக்களை நீக்கி கண்களை பொழிவடையச் செய்யும்.

தேன்

சிறிதளவு தேனை கண்ணில் போட்டு 15நிமிடங்கள் விட்டு கவனமாக கழுவ வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் அடர்ந்த இமைகளை பெறலாம் கண்களும் குளிர்ச்சியாக இருக்கும்.

கிறீன் டீ

கிறீன் டீ யைக் கொண்டு கண்களை கழுவிவந்தால் கண்கள் புத்துணர்வுடன் காட்சியளிக்கும்.மற்றும் இந்த கிறீன் டீ பைகளை சிறிதளவு நீரில் நனைத்து கண்களில் வைத்து 20 நிமிடங்கள் வரைவிடுங்கள் பின்னர் நீரினால் கழுவி விடுங்கள்.

விட்டமின்கள்

விட்டமின்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் அது செல்களின் தொழிற்பாட்டுக்கும் இரத்த ஓட்ட மேம்பாட்டுக்கும் உதவும். இதனால் கண்கள் எப்பொழுதும் இளமையாக தோன்றும்.