மாதவிடாய் காலத்தில் உண்ணவேண்டிய உணவுகள்!

முழுத் தானியங்கள்

பொதுவாக முழுத்தானியங்கள் மக்னீசியத்தைக் கொண்டுள்ளது. மக்னீசியம் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலிக்கு சிறந்த நிவாரணியாகும்.மேலும் அவை மற்ற உணவுகளை விட அதிக சத்துக்களை கொண்டிருக்கிறது.மற்றும் நார்ச்சத்தையும் கொண்டிருப்பதால் குடற் தொழிற்பாட்டையும் மேம்படுத்தும்.

தயிர்

உங்களின் கல்சியம் அளவை மேம்படுத்துவதோடு விட்டமின் டி யையும் வழங்குகிறது.மேலும் இதில் உள்ள பக்றீரியாக்கள் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வைக் கொடுக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் மற்றும் விட்டமின் பி 6 போன்றன காணப்படுகிறது.அது உங்கள் தசைகளின் இயக்கத்திற்கு உதவுவதோடு சரியான அளவில் பொட்டாசியத்தை எடுத்துக்கொள்வதால் அது இரத்த அழுத்தத்தை பேணுவதோடு மூளைக்கும் சுறுசுறுப்புத் தன்மையை வழங்கும்.

சல்மன் போன்ற மீன்கள்

அதில் ஒமேகா3 இருப்பதால் இது இதயத்திற்கு நன்மையளிக்கும் மற்றும் மாவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிக்பு போன்றவற்றிலிருந்து விடுபட உதவும்.

முட்டைக்கோவா

இதில் பைபர்,விட்டமின் பி6,விட்டமின் ஈமற்றும் மக்னீசியம் உள்ளது இது மாதவிடாய் காலத்தில் போசணையை அளிப்பதோடு, இதிலுள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் செங்குருதிச்சிறு துணிக்கைகளின் அளவை கூட்டும்.

டார்க் சொக்லெட்

இது மக்னீசியத்தைக் கொண்டுள்ளது மற்றும் என்டொர்பின் உற்பத்தியைக் கூட்டுகிறது.மாதவிடாய் காலத்தில் உண்பது சிறந்த பலனைத் தரும்.